Answers to the Riddles!

Raffle Puzzles with Answers!

1. தலையை சீவினால் தாளில் நடப்பான் – அவன் யார்? பென்சில்


2. வெளியில் இருப்பவனைத் தொட்டால் உள்ளிருப்பவன் அலறுவான் – அவன் யார்? காலிங் பெல்


3. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டு கைகள் – அது என்ன? குடை

4. அடித்துக் கொண்டே இருப்பார்கள், ஆனால் சண்டையில்லை – அவர்கள் யார்? கண் இமைகள் / இதயம்


5. கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாகி வெளியே வருவான் – அவன் யார்? பூரி


6. தாடிக்காரன் மீசைக்காரன், கோவிலுக்கு போனால் வெள்ளைக்காரன் – அவன் யார்? தேங்காய்


7. கண்ணில்லாத மனிதனுக்கு காசு இல்லாத திரைப்படம் – அது என்ன? கனவு


8. கருப்புத் திண்ணை மேல் வெள்ளைக்காரன் வட்டம் அடிக்கிறான் – அவன் யார்? தோசை


9. வெள்ளை ரோட்டில் கருப்பு கார் – அது என்ன? கண்


10. சிகப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும் – அது என்ன? உதடு – பற்கள்